பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி-அமைச்சர் அன்பில் மகேஸ்!

சென்னை, செப், 8 சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாண­வர்­க­ளிடையே மூட­நம்பிக்­கை­களை விதைக்கும் நோக்கில் பேசிய மூட­நம்பிக்கை பேச்­சா­ளர் மகா­விஷ்ணுவை போலீ
சார் கைது செய்துள்­ள­னர்.மேலும் அவரிடம் தீவிர விசா­ரணை நடத்­தப்­பட்டு வருகிறது.இது குறித்து தஞ்­சை­யில் செய்தியா­ளர்­களை சந்­தித்த பள்ளிக்­கல்வித்துறை அமைச்­சர் அன்பில் மகேஸ் பொய்­யாமொழி, ஒவ்­வொரு குடி­ம­க­னும் அறிவு சார்ந்த அரசியலமைப்பை உருவாக்க ேவண்டும் இந்தி அரசியல­மைப்பு கூறியுள்ளது. அதனை பின் பற்றியே தமிழக முதலமைச்­சர்  அமெரிக்­காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்­தா­லும் மகா­விஷ்ணு விவ­கா­ரம் தொடர்­பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்.பள்ளி­க­ளில் நிகழ்ச்சி­களை வரை­யறுக்க தனி கமிட்டி உருவாக்­கப்­ப­டும் என முதலமைச்­சர் கூறியுள்­ளார்.விரை­வாக இது தொடர்பாக கமிட்டி அமைக்­கப்­ப­டும். இந்தவிவ­கா­ரத்தில் மகா­விஷ்ணு மீது சட்­டப்­படி நடவடிக்கை எடுக்­கப்­படும்,” என்று தெரிவித்தார்.