மதுரை, ஜூலை 5:
மதுரை கிரைம்பிரான்ச் பகுதியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில், இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தோருக்கு “பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (பிசிஎம்)” என்ற சாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஜே. இப்ராஹிம் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் மாநிலப் பொருளாளர் நஜிமா பேகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், இப்னு, நிஜாமுதீன், அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் அப்துல் ஹமீது, பிலால் ராஜா, வடக்கு மாவட்டத் தலைவர் ரபீக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தோருக்கு பிசிஎம் சாதிச் சான்றிதழ் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிசிஎம் சாதிச் சான்றிதழ் அரசாணை ரத்து: தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்






