அஞ்செட்டி அருகேகனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு,கிராம மக்கள் சோகம்!

அஞ்செட்டி அருகேகனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு,கிராம மக்கள் சோகம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி பேடரஹள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் மாது இவர் சொந்தமாக 30 ஆடுகளை வளர்த்து வந்தார்நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்கு கொண்டு சென்றவர் இரவில் தன் வீட்டு அருகில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கொட்டகையில் அடைத்து வைத்தார் இந்நிலையில் இரவு கனமழை பெய்த நிலையில் அதிகாலையில்ஆடுகளின் அலறல்சத்தம் கேட்டு ஒடிவந்து பார்த்தபோதுஆலோ பிரிக்ஸ்சுவர் இடிந்து விழுந்து இடுபாடுகளில் சிக்கி 15 ஆடுகள் 5 குட்டிகள் என 20 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது இதை கண்ட மாது உடனடியாக மாடக்கல் கிராம நிர்வாக அலுவலர்
ரஜினியிடம் தெரிவித்தார் தொடர்ந்து அஞ்செட்டி கால்நடை அதிகாரிகளுக்கு கிராமநிர்வாக அதிகாரி புகார்கொடுத்ததை அடுத்து அஞ்செட்டி கால்நடை மருத்துவர் சிவப்பிரியா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு 15 ஆடுகள் 5 குட்டிகளை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்அருகேஉள்ள விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டது,இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது,