ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் டி.வி.கே. கட்சியினர் ரத்ததானம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் டி.வி.கே. கட்சியினர் ரத்ததானம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம், ஜூன் 16:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக வெற்றி கழகம் (டி.வி.கே.) சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டி.வி.கே. ஒன்றிய இணைச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் அசோக், மகேந்திரன், அரவிந்த்வேல்மணி, அருள்முருகன், மணிமாறன், சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குலோத்துங்க சோழன், வெங்கடேசன், தங்கதுரை, அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், டி.வி.கே.வைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தன்னார்வமாக பங்கேற்று சுமார் 30 யூனிட் ரத்தம் வழங்கினர்.

சேகரிக்கப்பட்ட ரத்தம் ஏழை, எளிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரின் மருத்துவத் தேவைகளுக்குப் பயன்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையையொட்டி வழக்கமான கர்ப்பகால பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு, டி.வி.கே. நிர்வாகிகள் பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினர்.

இந்த மனிதநேயப் பணியை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்