சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திராவிட பேரொளி “ஒரு பைசா தமிழன்” அயோத்திதாச பண்டிதரின் 181-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மேதகு எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைப்படியும் உத்தரவுக்கிணங்கவும், ஏற்காடு சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அயோத்திதாச பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு ஏற்காடு சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பெ. வேல்முருகன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் செ. தர்மலிங்கம், நகர பொருளாளர் ப. கார்த்திகேயன், நகர துணை செயலாளர் க. கோவிந்தராஜ், ஒன்றிய அமைப்பாளர் ஜெய்பீம் சுரேஷ், கள்ளக்குறிச்சி ஓவியர் அணி மாவட்ட அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஆட்டோ பிச்சமுத்து, பாலமுருகன், ராஜா, சுரேஷ், சச்சிதரன், ரித்திக், இளையராஜா, பிரதாப் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று அயோத்திதாச பண்டிதருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வு வாழப்பாடி பகுதியில் சமூக நீதி மற்றும் திராவிட சிந்தனையை வலியுறுத்தும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது.
திராவிட பேரொளி “ஒரு பைசா தமிழன்” அயோத்திதாச பண்டிதரின் 181-வது பிறந்தநாள் விழா






