சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போகும் என தகவல் பரவிய நிலையில் இன்று வெளியாகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது






