தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ள
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள் ளனர். இந்நிலையில், தவெகவின் அமைச்சரவைப் பட்டியலில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார் எழுந்துள்ளது.சிலர் தங்களுக்கு எந்தத் துறை வேண்டும் என தவெக தலைமையிடம் கேட்கவும் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக,என்.ஆனந்த் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா விளையாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், அருண்ராஜ் நிதித்துறை,
செங்கோட்டையன், வெங்கட்ரமணன், மரிய வில்சன், ராஜ்மோகன், சத்யபாமா, வி.எஸ்.பாபு, கமலி, சேலம் பார்த்திபன், காரைக்குடிபிரபு, முஸ்தபா உள்ளிட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,தொங்கு சட்டசபை அமைந்துள்ள இந்தச்சூழலில் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தலைமை பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் 2 அமைச்சர் பதவியைத்தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிதுள்ளதாகக் கூறப்படுகிறது.இதில், 5 சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில் மேலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பெ.விஸ்வநாதன்,கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜேஸ் குமார் ஆகியோர் அமைச்சர் ஆவதற்கான வாளிணிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசிகவும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு
அமைச்சர் வழங்குகிறோம் என்று தவெக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி வன்னியரசு அமைச்சராகிறார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு அமைச்சர் என்று பேசுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரத்தில் சட்டம்ஒழுங்கு ஏடிஜிபி, உளவுத்துறை டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை முதல்வர் பதவி கேட்கும் புஸ்ஸி ஆனந்த்… தவெகவிடம் 2 அமைச்சர் கேட்கும் காங்கிரஸ்…






