“சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே”.. தமிழிசை

தமிழகத்தில், வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,260 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசை பலரும் விமர்சித்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “போர்ச்சூழல் காரணமாக வணிக சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாக திறமையை காட்டுகிறது” என்றார்.