சிறுவன் ஓட்டிய கார் விபத்து; சிறுமி பரிதாப பலி

களக்காட்டைச் சேர்ந்த 17 வயது துரைப்பாண்டி, தனது உறவினர் முருகன் (45) கொடுத்த காரை ஓட்டிச் சென்றபோது, மங்கம்மாள் சாலை ஓரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கன்சிகா (4) என்ற சிறுமி உயிரிழந்தார். மேலும், தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகிய குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக, காரை ஓட்டிய சிறுவன் துரைப்பாண்டி மற்றும் அவருக்கு கார் கொடுத்த உறவினர் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.