துணை முதல்வரானார் உதயநிதி! மின்சாரம்- மதுவிலக்குத்துறை அமைச்சராக பதவி ஏற்றார் செந்தில்பாலாஜி கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

சென்னை, செப்.30 தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில்புதிய அமைச்சர்களாக செந்தில்
பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் பதவியேற்றுக் கொண்­டனர். அவர்களுக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கவர்னர் மாளிகையில்பதவி ஏற்பு விழா நடந்தது.புதிதாக பொறுப்பெற் ற
அமைச்சர்களுக்கான துறைகள் வருமாறு செந்தில் பாலாஜி  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை.கோவி செழியன் உயர்கல்­வித் துறை,ஆர்.ராஜேந்திரன் சுற்று­லாத் துறை,ஆவடி நாசர் சிறுபான்மைநலத்துறை மற்றும் அயலகத் தமி­ழர் நலன் துறை, இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா.ராமச­ந்திரன் அரசுத் தலைமைக் கொற­டாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமை­ச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.அமைச்சர்கள் மனோ தங்க­ராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சிமஸ்தான் ஆகியோர் அமைச்சர­வையில் இருந்து நீக்கப்பட்டனர்.அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்க­ப்பட்டது. தொடர்ந்து சென்னை ,கிண்டி ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற அமைச்சர்கள் பத­வியேற்பு நிகழ்ச்சியில், செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் ,ஆவடி நாசர், கோவி.செழியன்ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்­களாக பதவி ஏற்றனர். தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்க­ளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், முத­ல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேர­வைத் தலைவர் அப்பாவு, அமை­ச்சர்கள், எம்.பி.க்கள், மேயர்,அதிகாரிகள், உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.துணை முதல்வர் உத­யநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்புநிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ,விடுதலைச் சிறுத்தைகள் கட்­சித் தலைவர் தொல். திருமா­வளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்ரா. முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் பங்கே­ற்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் செந்­தில் பாலாஜி. பணமோசடி வழ­க்கில் மூன்று நாள்களுக்குமுன்பு நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்தஅவர், மீண்டும் அமைச்சராகப்பொறுப்பேற்றிருப்பதை எதிர்க்­கட்சிக்ளை சாடி வருகின்றன.விளையாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டா­லின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்­ளார். சனாதன ஒழிப்பை ஒருஆயுதமாக மாற்றி பாஜகவுக்குஎதிராக தேசிய அளவில் கொண்டு சென்றது, எய்ம்ஸ்மருத்துவமனை விவகார­த்தில் செங்கல் விஷயத்தைகையில் எடுத்து பேசி பாஜக­வுக்கு அழுத்தம் கொடுத்தது.விமர்சனங்களுக்கு மத்தியில்பார்முலா 4 கார் போட்டிகளைவெற்றிகரமாக நடத்தி காட்­டியது. முதல்வர் ஸ்டாலின்அமெரிக்கா சென்ற போதுஆட்சி நிர்வாகத்தை சிறப்பாககவனித்துக்கொண்டது எனபல்வேறு நற்பெயரையும் சம்பா­தித்துள்ளார்.அதே வேளையில்வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றனர்.அதற்கு பதிலளித்திருக்கும்அவர், “என் மீது வைக்கப்­படும் விமர்சனங்களை வரவே­ற்கிறேன். அதை உள்வாங்கிக்கொண்டு, எனது பணிகள்மூலம் பதில் அளிப்பேன்” எனபதிலடி கொடுத்துள்ளார்.

மறுத்தவர் கையாலேயே மீண்டும் பதவி ஏற்பு!அமலாக்கத்துறையால் கைது செய்­யப்பட்ட நிலையில் செந்தில்பாலாஜியின்அமைச்சர் பதவி பறிக்கப்பட காரணமாகஇருந்தவர் கவர்னர் ரவி. கைது செய்யப்ப­ட்ட ஒருவர், இலாகா இல்லாத அமைச்சராகஇருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால் திமுக அரசுக்கும், கவர்னரு­க்கும் மோதல் வலுத்தது. தற்போது உச்சநீதி­மன்றத்தால் ஜாமீனில் விடுதலையாகி உள்ளசெந்தில் பாலாஜி மீண்டும் தான் ஏற்கனவேவகித்து வந்த அதே துறைகளின் அமைச்­சராகி இருக்கிறார். அவருக்கு தற்போது,கவர்னர் ரவியே பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்­களான பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் ஆகியோர் பங்கேற்கவில்லை.