ஆங்கிலம் கற்பிக்க வெங்காடம்பட்டிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வருகை

ஆலங்குளம், ஏப்.29
தென்காசி மாவட்டம் கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளுக்கு மையமாக விளங்கும் வெங்காடம்பட்டி கிராமத்தில், ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் “Trust India” அமைப்பின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

சேவை, கல்வி, ரத்ததானம், சமையல், சிலம்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னிலை வகிக்கும் இக்கிராமம், உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகையால் தனித்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், போலந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் மே 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில், வெங்காடம்பட்டி, கோவிலூற்று, மயிலப்பபுரம், லட்சுமியூர், கருத்தலிங்கபுரம், வள்ளியம்மாள்புரம், நெல்லையப்பபுரம், சின்னகுமார்பட்டி, பூலாங்குளம், வைகுண்டனூர், கரிசலூர், சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேச இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த Alan மற்றும் Emma ஆகியோர் இந்த பயிற்சி முகாமை தொடங்கி வைக்கின்றனர். மேலும், பாளை ஜான்ஸ் கல்லூரி ஆங்கில பேராசிரியர் டாக்டர் ரத்தின பிரபு, கொல்லம் அமிர்தா பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் தா. கணேசன், ஆசிரியை பீமு, விஜயராணி, நன்னன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர்.

“டிரஸ்ட் இந்தியா” அமைப்பின் மாரிச்செல்வம், ரா. சாந்தி, காளியம்மாள், முத்துசெல்வி, மயிலை பவித்ரா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துகின்றனர். பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுகளை “டிரஸ்ட் இந்தியா” முதல்வர் சாந்தி திருமாறன் செய்துள்ளார்.

இந்த நிகழ்வை பொது நல ஆர்வலர் பூ. திருமாறன் ஒருங்கிணைக்கிறார். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முன்பதிவுக்கு 63790 04001 மற்றும் 77087 75647 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.