ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் 21 ரயில்கள் ரத்து, முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு!

ஆந்திரபிர­தே­சம் மற்­றும் தெலங்­கா­னா­வில் ஏற்­பட்­டுள்ள கடும் வெள்­ளப்பெருக்கு கார­ண­மாக 21 ரயில்­கள் ரத்துசெய்­யப்­பட்­டுள்­ளன. இரு மாநில முதல்­வர்­க­ளு­டன் பேசிய பிர­த­மர் மோடி,  மத்­திய அரசு சாத்­தி­ய­மான அனைத்து உத­வி­களை­யும் வழங்­கும் என்று உறுதி அளித்­துள்­ளார்.ஆந்­தி­ரப் பிர­தே­சம் மற்­றும் தெலங்­கா­னா­வில் ஏற்­பட்­டுள்ள கடும் வெள்­ளப் பெருக்கு கார­ண­மாக,தென் மத்­திய ரயில்வே (SCR) மேலும் 21 ரயில்­களை ரத்து செய்­துள்­ளது.பல இடங்­க­ளில் தண்­டவாளங்­கள் சேத­ம­டைந்­துள்­ளதா­லும், தண்­ணீர் தேங்­கி­யுள்­ளதா­லும் மேலும் 10 ரயில்­கள் மாற்றுப் பாதையில் திருப்­பி ­வி­டப்­பட்­டுள்­ளது. தத­ச­ய­பட்ட 21 ரயில்­க­ளில்,சென்னை சென்ட்­ரல் – சாப்ரா விரைவு ரயில், சாப்­ரா-சென்னை சென்ட்­ரல் விரைவு ரயில்,சென்னை சென்ட்­ரல்­ பு­து­டெல்லி, புது­டெல்லி சென்னை சென்ட்­ரல் ஆகிய ரயில்­கள் ரத்து செய்யப்­பட்­டுள்­ளதாக தென்மத்­திய ரயில்வே (எஸ்­சி­ஆர்) ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்ட செய்­திக்­ குறிப்­பில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.  ஆந்­திர முதல்­வர் சந்­தி­ரபாபு நாயுடு, தெலங்­கான ­முதல்­வர் ரேவந்த் ரெட்டி ஆகி­யோ­ரி­டம் தொலைபேசி­யில் உரையா­டிய பிர­தமர் நரேந்­திரமோடி,கன­மழை மற்­றும் வெள்­ளத்­தால் பாதிக்கப்­பட்ட இரு மநி­லங்­களின நிலைமை  குறித்து கேட்­டறிந்­தார்.நில­மையை எதிர் கொள்ள மத்­திய அரசு அனைத்து உத­வி­களை­யும் வழங்­கும் என்று பிர­த­மர் உறு­தி­ய­ளித்­தார்.தெலங்­கானா முதல்­வர் ரேவந்த் ரெட்­டி­யு­டன் பிர­தமர் மோடி தொலைபே­சியில் பேசி­யது குறித்து அம்­மா­நிலமுதல்­வர் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், கன­ம­ழையால் பாதிக்­கப்­ பட்ட பகு­தி­களில் வெள்ள நிலைமை குறித்­தும்,சேதங்­கள் குறித்­தும் பிர­தமர் கேட்­ட­றிந்­தார்.மாநி­லத்­தில் கன­ம­ழையால் ஏற்­பட்­டுள்ள இழப்­பு­கள் குறித்து பிர­த­ம­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்ற முதல்­வர் ரேவந்த்ரெட்டி, எந்­த­வித உயிர்ச்­சேத­மும் ஏற்­படாத வகையில் மாநில அரசு எடுத்தபல்­வேறு நடவ­டிக்­கைகளை பிர­த­ம­ரி­டம் விளக்­கி­னர். மழையால் மேலும், கம்­மம் மாவட்­டம் பெரும் பாதிப்­பைச் சந்­தித்­தது குறித்­தும்,மழை­யி­னால் பெரும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது குறித்­தும் பிர­த­ம­ரி­டம் முதல்­வர் விளக்­கி­னார்.மாநில அரசு இயந்­தி­ரம் மிகுந்த விழிப்­பு­டன் இருந்து உயி­ரி­ழப்­பைத்தடுத்­ததற்­காக பிர­த­மர் மோடி பாராட்­டி­னார்.அவ­சரசேவைகளை வழங்க ஹெலி­காப்­டர்­கள் அனுப்­பப்­படும் ­ என்று பிரத­மர் உறு­தி­யளித்­தார்.கன­ம­ழையால் பாதிக்­கப்­பட்­டுள்ள தெலுங்­கானா மாநி­லத்­திற்கு தேவையான உத­வி­களை­யும் நிவா­ர­ணங்­களை­யும் மத்­திய அரசு வழங்­கும் என்­றும் பிர­த­மர் கூறி­னார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கன­மழை கார­ண­மாக தெலங்­கானா மாநி­லத்­தில் அனைத்து தொடக்க மற்­றும் நடு­நி­லைப் பள்­ளி­களுக்­கும் நேற்று(திங்­கள்­கி­ழமை) விடு­முறை­அறி­விக்­கப்­ பட்­டு­ள்ளது.