கீழ ஆம்பூரில் இலவச கண் மருத்துவ முகாம்

கீழ ஆம்பூரில் இலவச கண் மருத்துவ முகாம்

ஆலங்குளம் ஏப்.26

தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரில் கொக்கிரகணம்
தி.ஐ. பவுண்டேஷன் மற்றும் கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்
கீழ ஆம்பூரில் உள்ள கோகுலம் மஹாலில் வைத்து நடைபெற்றது

இலவச மருத்துவ முகாமுக்கு கீழாம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை தலைவர் பசுமை கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார் கௌரவ ஆலோசகர் சண்முக சுந்தர ராஜா முன்னிலை வகித்தார்
முகாமில் கண் மருத்துவர் சௌமியா
ஒளி பரிசோதகர் இந்திரா மற்றும் சாருமதி ஆகியோர் உட்பட சமூக ஆர்வலர்கள் ராஜா சுப்பிரமணியன், திருமலை குமார் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமில் கீழ ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

முடிவில் கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்