தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான 3 மசோதாக்களும் மக்களவையில் நேற்று தோற்கடிக்கப்பட்டன. வாக்கெடுப்பில் இந்த மசோதாக்களுக்கு 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்கவில்லை.
புதுடெல்லி, ஏப்.18-கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் படி நாடாளு மன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும் .மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல் படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850ஆக அதிகரிக்க மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது.
3 மசோதாக்கள் தாக்கல்
இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற் கொள்ளும் நோக்கிலும், யூனியன் பிரதேசங்களிலும் மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவாத உறுதி செய்யும் நோக்கிலும், இதற்காக தொகுதி மறுவரை மேற் கொள்ளவும் மூன்று மசோதாக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டன.
அரசியல் சாசன திருத்தம்(131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரை யறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்டஅமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். யூனியன் பிரதேசசட்டங்கள் (திருத்த) மசோதா2026-ஐ உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
நள்ளிரவிலும் விவாதம்
இந்த மசோதாக்கள் அறிமுகப்படு த்தப்பட்டதை அடுத்து இவற்றின் மீது விவாதம் தொடங்கியது. ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும்பலர் தங்கள் கேள்விகளையும் வாதங்களையும் முன்வைத்தனர்.இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் பேசினர். இந்த விவாதம் நேற்று முன் தினம் இரவு சுமார் 1 மணி வரை நீடித்தது.இதையடுத்து நேற்றுகாலை மீண்டும் விவாதம் தொடங்கியது. நேற்றைய விவாதத்தில் திமுகஎம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி,ஐக்கிய ஜனதா தளம் எம்பிராஜிவ் ரஞ்சன் சிங், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சிஎம்பி ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு,சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள்யாதவ், ஷிரோமணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல்,திமுக எம்பி ராஜா, காங்கிரஸ்எம்பி ஜோதிமணி, பாஜக எம்பி ஹேம மாலினி , மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.எம்பிக்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.நேற்றைய விவாதத்தின்போது,நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
ராகுல் சாடல்
ராகுல் காந்தி பேசும் போது,“மத்திய அரசு கொண்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. மாறாக தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி” என்று சாடினார்.தொகுதி மறுவரை மசோதா தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் எனமக்களவையில் வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் , அவசர கதியில் நிறை வேற்றினால் அது கூட்டாட்சியின் கட்டமைப் பைக் சிதைத்து விடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கனிமொழி கேள்வி
“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை . ஆனால்,அதனை கேடயமாக வைத்து,தொகுதி மறுவரை யறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும்,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது .மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது.தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள உயர்வை பின் பற்றாவிட்டால் என்ன நடக்கும்?” என்று திமுஎம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.
உறுப்பினர்களின்கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர். இறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக நீண்ட விளக்கத்தை அளித்தார்.இதனைத் தொடர்ந்து மசோதாமக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.3 மசோதாவுமே தோல்வி மக்களவையில் தாக்கல் செய்யப் பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டமூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்குவாக்குகள் ஆதரவாக தேவை.அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதாம நிறைவேற 326 வாக்குகள் தேவை.அது கிடைக்காத காரணத்தால்,மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.
எண்ணிக்கை பலம்
மக்களவையின் மொத்த பலம்543 ஆகும். இதில் 3 இடங்கள்காலியாக உள்ளன. தற்போது 540
எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது எதிர்க்கட்சிகளிடம் 233 எம்.பி.க்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின் அடிப்படையில் மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 326 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு அந்த பெரும் பான்மை இல்லை.மாநிலங்களவையின் மொத்தபலம் 245. இதில் ஓர் இடம் காலியாக உள்ளது. அவையில் 244எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.இதில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 141எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் 83 எம்.பி.க்கள்உள்ளனர். மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு என்ற வகையில் மசோதாக்களை நிறைவேற்ற 163எம்.பி.க்களின் ஆதரவு தேவை.மசோ தாவை நிறைவேற்றும் அளவுக்கு மாநிலங்களவையிலும்பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இந்தச் சூழலில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தோவ்வி அடைந்தன.






