விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எழச்சி தமிழரின் 62-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது

 

*விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எழச்சி தமிழரின் 62-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது*

விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் கருவனூர் தொல்காப்பியர் திடலில் எழுச்சி தமிழரின் 62-வது பிறந்தநாள் விழா மற்றும் கட்சியின் அங்கிகாரம் பெற்றதையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையேற்று போட்டியை தொடங்கிவைத்தார்

இப்போட்டியில் அலங்காநல்லூர்,கொட்டாம்பட்டி, மதுரை, கல்லானை மேலவளவு, உள்ளிட்ட மதுரை புறநகர் பகுதிகளில் இருந்து சுமார்15 காளைகள் கலந்துகொண்டன.வெற்றிபெற்ற காளைகளுக்கும்,மாடுபிடி வீரர்களுக்கும்
பரிசுகள் மதுரை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
வழங்கினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட பொருளார் முத்தமிழ் பாண்டியன், பறை முருகன், தினேஷ்,
திமுக.பூமி, ஈழவழவன், இராவணன், அழகேந்திரன், கருவனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வடமாடு மஞ்சு விரட்டை கண்டு களித்தனர்