வீரவநல்லூரில் 16 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

வீரவநல்லூரில் 16 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
வீரவநல்லூர், மார்ச் 14:
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழகம் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வீரவநல்லூர் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் வீ. சுப்பையா தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 16 கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 6 வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சூடாமணி, இளைஞர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன் ,வார்டு செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகள், மாவட்ட பிரதிநிதிகள், துணைச் செயலாளர்,கழக நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதற்கு கிரிக்கெட் அணியினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.