சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு கொடுக்க வந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாசில்தார் அலுவலகத்தில் இல்லாததால் காணவில்லை காணவில்லை தாசில்தாரை காணவில்லை என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சாலையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பட்டா இல்லாத மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வீடு வழங்க வேண்டும், பல ஆண்டு காலமாக நீர்நிலை புறம்போக்கில் கோயில் நிலம் நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வைத்து மனு கொடுத்தும் போராட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அறிவித்திருந்தது, இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் திடீரென சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர், பின்னர் மனை பட்டா கேட்டு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர், நீண்ட நேரம் ஆகியும் தாசில்தார் அலுவலகத்திற்கு வராதால் காணவில்லை காணவில்லை வட்டாட்சியரை காணவில்லை என கோஷங்கள் எழுப்பியதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் தாமதமாக வந்த வட்டாட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவினை பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.






