நெல்லை தொகுதி திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை, ஏப்.3 -நெல்லை தொகுதி திமுக வேட்பாளராக மாநகர மேற்கு பொறுப்பாளர் சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் , முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நெல்லை தொகுதி செயல்வீரர்கள்
கூட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரில் உள்ள மண்ட பத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் வி .கே .முருகன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா,
மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், சிறு பான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் டிபிஎம்.மைதீன்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொகுதி பொறுப்பாளரும் , தலைமை செயற்குழு உறுப்பினருமான பேச்சிபாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் நெல்லைமத்திய மாவட்ட திமுகபொறுப்பாளர் அப்துல்வகாப் கலந்து கொண்டு பேசியதாவது: நெல்லை,பாளை தொகுதிகளில்  திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது
உறுதியாகி விட்டது. மோடி, அமித்ஷா என யார் வந்தாலும் தமிழ் நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் மலரும் என்பது உறுதியாகி விட்டது.இருப்பினும் நமது வேட்பாளர்களின்வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும்.களப்பணி தான் முக்கிய ம் . திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லைத் தொகுதி வேட்பாளர் சுப்பிரமணியன் பேசுகையில், நெல்லைதொகுதியில் நமது கூட்டணிகட்சிகளின் எழுச்சியை பார்க்கும் போது நாம் எப்படியாவது 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.இருப்பினும் களப்பணிதான் முக்கியம். தமிழ் நாட்டில் திமுக கூட் டணி அமோக வெற்றி பெறும் . அதேபோல் நெல்லை தொகுதி நம்பர் ஒன் தொகுதியாக மாறும். எனவே அனைவரும் சுறு சுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏஎல்எஸ். லெட்சுமணன், நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், கிரிஜாகுமார் , தொமுச பேரவை தலைவர்தர்மன், ஒன்றிய செயலாளர்கள் கல்லூர் மாரியப்பன் அருள் மணி, அன்பழகன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம் என்ற கோபி , டாக்டர்சங்கர் ,  நெல்லை மண்டல தலைவர் மகேஸ் வரி , மாவட்ட வழக்கறிஞர்அணி அமைப்பாளர் காமினித் தேவன் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அலிப்மீரான், மீரான், காங்கிரஸ்கட்சி மாவட்ட தலைவர் ராமேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மனிதநேய மக்கள் கட் சி மாவட்டசெயலாளர் ரசூல்மைதீன், மனித நேய ஜனநாயக கட்சிமாநில துணைத்தலைவர் அலிப் பிலால், மாவட்ட செயலாளர் பாளை பாரூக்,விசிக மண்டலத் தலைவர் கரிசல் சுரேஷ், மாவட்ட செயலாளர் எம் .சி .கார்த்திக் , தேமுதிக மாவட்டசெயலாளர் ஜெயச்சந்திரன், துணைச்செயலாளர் ஆனந்தமணி, திமுக மாவட்ட வர்த்தகர் அணி சேக்தாவூது , எல்ஐசி பேச்சிமுத்து , முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க.மணி,வட்டச் செயலாளர்கள் முத்துராமன்,வேல்முருகன், செந்தில் முருகன், சடாமுனி,கவுன்சிலர் உலகநாதன், சூப்பர் மணி ஜலில் ரகுமான், அப்துல்கயூம் உள் படபலர் கலந்து கொண்டனர்.