தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல் : விஜய் ஆவேசம்

சென்னை
நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சிசார்பில் திடீரென அந்த இடத்தில்பள்ளம் தோண்டப்பட்டு,இரும்பால் ஆன தடுப்புகள்வைக்கப்பட்டுள்ளன. இந்ததிடீர் பள்ளங்களும் தடுப்புகளும்எங்கிருந்து வந்தன?” எனதவெக தலைவர் விஜய் கேள்வி
எழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் தனது எக்ஸ் தளத்தில்,“தமிழக வெற்றிக் கழகத்தின்சார்பில் திட்டமிடப்பட்டபரப்புரைக்குச் சென்னை மாநகரக்காவல் துறையும், அதிகாரிகள்சிலரும் இணைந்து முட்டுக்கட்டைபோட்டிருப்பது, ஜனநாயகத்தின்மீது நடத்தப்பட்டுள்ள ஒருபாசிசத் தாக்குதலே ஆகும்.நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள்முன்பே தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், சென்னைபெரம்பூர் சட்டப்பேரவைத்தொகுதி, முல்லை நகர் சந்திப்பில்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளஅனுமதி கோரப்பட்டது. ஆனால்,நம்முடைய தேர்தல் பரப்புரைநிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்புசென்னை மாநகராட்சி சார்பில்திடீரென அந்த இடத்தில் பள்ளம்தோண்டப்பட்டு, இரும்பால் ஆனதடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த திடீர்ப் பள்ளங்களும்தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?இந்த நிலையில் அங்கே காவல்துறை ஆய்வு செய்து 3000 பேர்கூடமுடியாது என்று கூறியுள்ளது.இதன் அடிப்படையில் தற்போதுஅந்த இடம் பிரச்சாரம்செய்வதற்கு உகந்ததல்ல என்றுஅனுமதி மறுக்கப்பட்டு,தமிழக வெற்றிக் கழகத்தின்மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.இப்படி அதிகாரிகள் சிலரின்துணையுடன் தவெகவுக்குஎதிராகச் செயல்படும் திமுக
காபந்து அரசுக்கு வெட்கமாகஇல்லையா? தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நான் தேர்தல்
பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சிசெய்யும் போதெல்லாம், திமுகஅரசு ஏதேதோ காரணங்களைக்
கூறி, அனுமதியைத் தாமதிப்பதும்அல்லது அனுமதி மறுப்பதும்தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்றஒரு புதிய அரசியல் கட்சியின்ஜனநாயக உரிமைகளைத்
திட்டமிட்டு நசுக்கும் இந்தச்செயல், ஆளுங்கட்சியின்ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல் படுகிறார்களா என்றஎண்ணத்தை ஏற்படுத்துகிறது.அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்“ என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக்கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள்,வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.