பரமக்குடி (தனி) தொகுதியில் வாகன சோதனை: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.90,500 பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பார்த்திபனூர் மருச்சுக்கட்டி சோதனை சாவடி அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.90,500/- பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும், பெரிய அளவில் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
பரமக்குடி (தனி) தொகுதியில் வாகன சோதனை: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.90,500 பறிமுதல்






