ஆவணங்களின்றி ரூ.4.95 லட்சம் மதிப்பிலான ஃப்ளெக்ஸ் போர்டுகள் பறிமுதல்
திருநெல்வேலி, மார்ச் 26:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று (26.03.2026) காலை சுமார் 7.25 மணியளவில் மேலப்பாளையம் செல்லும் சாலையில் நடைபெற்ற சோதனையின் போது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 45 ஃப்ளெக்ஸ் போர்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4,95,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக விளம்பரப் பொருட்கள் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆவணங்களின்றி ரூ.4.95 லட்சம் மதிப்பிலான ஃப்ளெக்ஸ் போர்டுகள் பறிமுதல்






