ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூங்கா நகர் பகுதியில் பேரணி

திருநெல்வேலி மாவட்டம் – .பேரணி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூங்கா நகர் பகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதையும், தேர்தல் குறைதீர் செயலியான ‘சி.வி.ஜி’ (CVIGIL) பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி அமைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியாகவும் முன்னெடுத்தனர்.
பேரணியின் போது, வாக்குரிமையின் அவசியம், நேர்மையான தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக ‘சி.வி.ஜி’ செயலியின் மூலம் புகார் அளிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தேர்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.