திருநெல்வேலியில் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் – வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு செயல்விளக்கம்

திருநெல்வேலியில் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் – வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு செயல்விளக்கம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்கள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதில், தேர்தல் செலவின கண்காணிப்பு முறைகள், தேர்தல் நடைமுறைகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) சரியான முறையில் கையாளுவது குறித்து செயல் மாதிரி (demonstration) விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் மூலம் தேர்தலை நேர்மையாகவும் சீராகவும் நடத்த தேவையான வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது.