சிலிண்டர் தட்டுப்பாடு – தமிழகத்தை வஞ்சிக்கும் NDA அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வீரவநல்லூர் சிலிண்டர் தட்டுப்பாடு – தமிழகத்தை வஞ்சிக்கும் NDA அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

வீரவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பில் NDA அரசுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளானகாங்கிரஸ் கட்சி,மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

‎திமுக பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா தலைமையில், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், பொருளாளர் முத்துக்குமார் , தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாதுரை, ஜான் மத்தியஸ்,  மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி மற்றும் கவுன்சிலர் சிதம்பரம் ,மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P. நவாஸ் ஷரீப், நகர தலைவர் ஜாகிர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி நகரசெயலாளர் ஆசிக் இலாஹி, தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம் நகர செயலாளர் அசன் மைதீன்,

மனிதநேய மக்கள் கட்சி நகர பொருளாளர் சாகுல் ஹமீது,மனிதநேய மக்கள் கட்சி நகர துணை செயலாளர் மன்சூர் ஜலில்,கோதர் செய்யது அலி,மெகராஜ் நியாஸ்,காதர் மைதீன், சாதிக், இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் பி. ஆதம் இல்யாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைத் தலைவர் கே. அஸன் முகைதீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலும் பொது மக்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. சிலிண்டர் முன் பதிவு செய்வதற்கான காலக் கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் பதிவு செய்ய முயற்சித்தாலும் பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‎தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ் நன்றி கூறினார்.