புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்
பொன்னமராவதி, மார்ச் 11:
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் பாதுகாப்புக்காக முன்பு பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டை மர்ம நபர்கள் உடைத்து, சிலையின் தலைப்பகுதியில் பிள்ளையார் துண்டை கட்டி அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையில் நடந்துள்ள இந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னமராவதி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
– மலைதேவேந்திரன்
நகரச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
பொன்னமராவதி.
அம்பேத்கர் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்






