சேரன்மகாதேவியில் எச்ஐவி தொற்றாளர்களுடன் மகளிர் தின விழா

சேரன்மகாதேவி, மார்ச் 7:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலகு, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து எச்ஐவி தொற்றாளர்களுடன் இணைந்து சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் K. சாந்தி (MBBS, DGO) தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் S. சாந்தி சுசீந்திரன் (MSOG) முன்னிலை வகித்தார்.

நம்பிக்கை மைய ஆலோசகர் மரிய செல்வம் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் டாக்டர் சாந்தி கலந்து கொண்டு மகளிர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் மரிய செல்வம், ஸ்ரீதர், பிரின்ஸ், ஆய்வக நுட்ப நிபுணர் வசந்தி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் எச்ஐவி தொற்றாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பீஸ் அறக்கட்டளை மருத்துவர் டாக்டர் அன்பு ராஜன், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் K. சாந்தி மற்றும் டாக்டர் சாந்தி சுசீந்திரன் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
சேரன்மகாதேவி உதவி மின் பொறியாளர் கைலாசமூர்த்தி,
சேரன்மகாதேவி பேரூராட்சி தலைவர் தேவி ஐயப்பன்,
சின்சியர் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் ஜமால் முகமது ஈஸா (திருநெல்வேலி),
மேலப்பாளையம் ஆசாத்,
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சே. நெய்னா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கிராமோதயா, பேச்சி டிரஸ்ட், பீஸ் டிரஸ்ட், ஆல் தி சில்ட்ரன் உள்ளிட்ட தொண்டு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர்.
முடிவில் ஆல் தி சில்ட்ரன் அமைப்பின் மதன் நன்றி உரை நிகழ்த்தினார்.