Children’s Paradise Matric School பள்ளியின் ஆண்டு விழா

சென்னை, பெசன்ட் நகர், 28.02.2026
Children’s Paradise Matric School பள்ளியின் ஆண்டு விழா 28.02.2026 அன்று பெசன்ட் நகர் ஓடை குப்பத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக தாளாளர் திரு. ராஜராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி. வேணி ராஜராஜன் ஆகியோரின் தலைமையில், ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கி வரும் இப்பள்ளி, எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகளைநடத்தி வருகிறது.

ஆண்டு விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு, மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக டாக்டர் எஸ்.ஜி. விஷால் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஆசிரியர்கள் அளித்த சிறப்பான பயிற்சியினால் மாணவர்கள் கண்கொள்ளாக் கலைநிகழ்ச்சிகளை மேடையில் வெளிப்படுத்தினர். குறிப்பாக, மாணவர்கள் மாஸ்டர் ஜே. எல். தாமஸ் அவர்களின் DMX விளக்குகள் பாடலின் நடனங்களுக்கு மேடையில் ஒளிர நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஜான் லாரன்ஸ், பள்ளி தொடர்ந்து கல்வி மற்றும் ஒழுக்கத்தில் முன்னேறி மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர்.