தமிழகத்தில் உள்ள 17 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது!

சென்னை, ஆக. 31– தமிழகத்­தில் 64 இடங்களில் சுங்­கச்­சா­வடிகள் உள­ளன. சுங்ககட்­ட­ணத்தை  ஒவ்வொ­டரு ஆண்­டும் உயர்த்­திக்­ கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்­ளது. அதன்­படி பல சுங்கச்சாவடிகளில், லோக்­ச­பா தேர்­த­லுக்கு பின், ஜூன் 3ம் தேதி கட்­டண உயர்வு நடைமு­றைக்கு வந்­தது. இதைத் தொடர்ந்து, தற்­போது         17 சுங்­கச்­சா­வடிகளில் செப்­டம்­பர் 1 முதல் கட்ட­ணம் உயர்த்­தப்­பட உள்­ளது. சென்­ன­சமுத்திரம், எலியார்­பதி, கொடை ரோடு, கிருஷ்­ ண­கிரி, மேட்­டுப்­பட்டி, மொரட்­டாண்டி, நாதக்­கரை ,ஓமலுார், பாயம்,ஸ்ரீபெ­ரும்புதுார்,  புதுார் பாண்­டியபுரம், சமயபுரம்,ஸ்ரீவை­குண்­டம், வீர­ சோ­ழபுரம், வேலன்­ செட்டியூர்,விஜ­யமங­கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்­ட­ணம் உயர்த்தப்­பட உள்ள சுங்­கச்­சாவடிகள். இங்கு, 5 சதவீ­தம் கட்­டண உயர்வு நடை மு­றைக்கு வருகி­றது. இத­னால், வாக­னங்களின் டயர்­க­ளுக்கு தகுந்­த­படி, 5 முதல் 150 ரூபாய் வரை     கட்­ட­ணம் அதிகரிக்­கப்­பட உள்ளது. இதற்கிடையே, 26 சுங்கச்­சா­வடிகளில் கட்­டண உயர்வு நடைமு­றைக்கு வருவதாக தகவல் பரவி வருகி­றது. கட்­டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ­சாலை ஆ ைணயம் முறையான அறிவிப்பை வெளியிடாததே, இதற்கு கார­ணம்.மேலும், சாலை அமைப்­பிற்­கானகட்­டணத்தை வசூல் செய்த பின், சுங்க கட்­ட­ணத்தை குறைக்க வேண்­டும். ஆனால், இந்த விதியை பின்பற்­றா­மல் , கட்­ட­ணம் ஒவ்­வொரு ஆண்­டும் உயர்ந்து வருகி­றது. இத­னால், சரக்கு வாக­னங்கள்,ஆம்னிபஸ்­களின் கட்­ட­ணம் மறை­முமக உயர்ந்து வருகி­றது. தமிழகத்­தில் விக்கிரவண்டி,தர்­மபுரி , கிருஷ்­ண­கிரி உள்ளிட்ட சுங்­கச்­சா­வடிக­ளின்    கட்­ட­ணம், செப்டம்­பர் 1 முதல் 7 சதவீதம் ரை,அதாவது 5 முதல் 150 ரூபாய் வரை உயர்த்­தப்படும் என்று அறிவிக்­கப்­பட்­டுள்­ளது. சுங்க கட்­ட­ணத்­தில் 40 சதவீதத்தை சாலை­கள் பரா­மரிப்­புக்கு செலவிடவேண்டும். பெரும்­பாலான சாலை­கள் பராம­ரிக்­கப்­ப­டுவதே இல்லை. சாலை­களை பராமரிக்காத நெடுஞ்­சா­லை­கள் ஆணையத்­திற்கு, சுங்க கட்­ட­ணத்தை உயர்த்த தார்மீக உரிமை இல்லை.சுஙக கட்­ட­ணஉயர்வால் சரக்கு லாரிகளின் வாடகை உயர்ந்து விலை­வாசி அதிகரிக்கும். தனியார் பஸ் கட்­டண­மும் உயரும்.