வீரவநல்லூர் 57வது நூலக வார விழா மற்றும் வாசகர் வட்ட பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று 30.11.2024 அன்று நூலக கட்டிடத்தில் வைத்து வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இலியாஸ் தலைமையில்,வாசகர் வட்ட செயலாளர் இரா. சந்திரசேகரன் வாசகர் வட்ட கவுரவ ஆலோசகர் இரா. பழனி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நூலகர் ந. குமாரி வரவேற்று பேசினார்,
நிகழ்ச்சிகளை திருநீற்றுச்செல்வன் தொகுத்து வழங்கினார், இவ்விழாவில் திருநெல்வேலி வழக்கறிஞர் இ.மதார் முகைதீன் மற்றும் பொறியாளர் செய்யது அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,இல்லம் தோறும் நூலகம் என்ற விருது மா. முத்துராமலிங்கம் வழக்கறிஞர் சந்தனகுமார் யோகா மாஸ்டர் வெங்கடேஷ் அகஸ்தியன் ஊக்கப் பரிசு சந்திரசேகர், பெரியார் பித்தன், கீதாமுத்துராஜ், மா. கருணாநிதி ஆகியவர்களுக்கு விருதுகளை மருத்துவர் சாந்தகுமார் மற்றும் சுழற் கழக சீ.இசக்கி சரவணன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள், பொன்விழா மலர் ஆக்கமும் ஊக்கமும் மற்றும் நூல் திறனாய்வை வாசகர் வட்ட பொருளாளர் பெரியார் பித்தன் திறனாய்வு உரையாற்றினார்.
வாசகர்வட்ட துணைத்தலைவர் கி. முத்தையா நோக்க உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பாத்திலிங்கம் பெருமாள் கவுன்சிலர்கள் தெய்வநாயகம், அனந்தராமன், பட்ட முத்து,ஆனந்தராஜ் உட்பட வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர் பேரூராட்சி மன்ற ஏழாவது வார்டு உறுப்பினர் ப. வெங்கடேஸ்வரி நன்றி கூறினார்.
வீரவநல்லூரில் 57 வது நூலக வார விழா மற்றும் வாசகர் வட்ட பொன்விழா ஆண்டு நிறைவு விழா






