பிரான்சேரி, பிப்.28:
இன்று (28.02.2026) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பிரான்சேரி ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டபத்தில் அ.இ.அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம், மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டாக்டர் இசக்கி சுப்பையா தலைமை தாங்கினார்.

விழாவில் மாரியம்மாள் மற்றும் மாரி ஆகிய இரு பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும் முருகேஸ்வரி மற்றும் சுடலி ஆகிய மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.
தி.மு.க., ம.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய என். முருகன் (HDFC Bank), இ. ஆயிரத்தப்பன் (எ) ரவி, எம். இசக்கிமுத்து, எம். தங்கமுத்து (எ) ரமேஷ், எம். கார்த்திக், எஸ். உச்சிமாகாளி, எஸ். சண்முகம், ஆர். ஐயப்பன், ஜி. நயினார், ஜி. சுப்பிரமணியன், எம். வெள்ளத்துரை, எம். மாரி, எம். ஆறுமுகநயினார், சுபாஷ், முகேஷ், இந்திரா, சுந்தரி, ரஞ்சிதம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இவ்விழாவில் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் பா. மாரிசெல்வம், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வி.வி. ராகவன், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஆனந்தகனி, புறநகர் மாவட்ட கலைப்பிரிவு துணைச் செயலாளர் செ. பூபதி, பேரூர் கழகச் செயலாளர் திருமலைநம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை வி. ஐயப்பன், என். மாடசாமி மற்றும் வி.வி. மாயா ஆகியோர்செய்திருந்தனர்.
விழா உற்சாகமான சூழலில் நிறைவுற்றது.






