சேரன்மகாதேவி, பிப். 24:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு சேரன்மகாதேவியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் இசக்கி சுப்பையா அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், நகரச் செயலாளர் வக்கீல் பழனி குமார், மாவட்ட அவைத்தலைவர் கூனியூர் மாடசாமி, மாநில

எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ராகவன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், மகாராஜன், செல்வகுமார், பன்னீர்செல்வம், சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.






