வீரவநல்லூர்,
12.02.2026.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,எஸ்.டி.பி.ஐ, இடது கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை கட்சி இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வீரவநல்லூர் திமுக நகர செயலாளர் சுப்பையா தலைமையில் ,அவைத்தலைவர் இரா. பழனி, பொருளாளர் முத்துக்குமார், துணை செயலாளர் விசாலாட்சி, முத்துராமலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் சுப்பு குட்டி ,அண்ணாதுரை ,பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா ,துணைத் தலைவர் வசந்தா சந்திரா ,கவுன்சிலர்கள் அப்துல் ரகுமான் ,சந்தானம், தாமரைச்செல்வி, கங்கா ராஜேஸ்வரி, சண்முகவேல் ,சின்னத்துரை ,தொழில் சங்க ஜான் மத்தியஸ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிதம்பரம் ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வேலம்மாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட பொருளாளர் ஆதம் இலியாஸ்,

நகரத் துணைத் தலைவர் அசன் மைதீன் ,நகரச் செயலாளர் ரிபாய் நகரப் பொருளாளர் பக்கீர் மைதீன்,மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட துணை தலைவர் வீரை நவாஸ் ஷரீப், நகரப் பொருளாளர் சாகுல் ஹமீது, 14வது வார்டு கிளைத்தலைவர் கோதர் இப்ராஹிம் ,தெற்கு பாரதி நகர் கிளை தலைவர் அல்லாஹ் பிச்சை ,நகர துணை செயலாளர் மதார் மைதீன், அமீர் மில்லத் SDPI அல்லா பிச்சை, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் அப்துல், வர்த்தக அணி செயலாளர் அன்வர், அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தை கட்சி சௌந்தரராஜன் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.






