பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினம்

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் அனுசரிப்பு
வீரவநல்லூர், பிப். —03.2026.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழக சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவருமான திரு. ஆவுடையப்பன் தலைமையில், வீரவநல்லூரில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா, பேரூராட்சி தலைவர் எஸ். சித்ரா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சூடாமணி, அவைத்தலைவர் இரா. பழனி, துணைச் செயலாளர் மா. முத்துராமலிங்கம், யூனியன் சேர்மன் குமார்,பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, மதியரசி அண்ணாதுரை, விவசாய அணி துணை அமைப்பாளர் என். சுபாஷ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பே. கிருஷ்ணன், தொழிலாளர் அணி வி.எஸ். கணேசா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தாமரைச்செல்வி, நகர துணைச் செயலாளர் விசாலாட்சி, முன்னாள் நகர செயலாளர் ரகுமான், இசக்கியா பிள்ளை, பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அடைக்கலம், ஜான், ராமசாமி, ஆறுமுகசாமி, சக்கரவர்த்தி, முருகன், சுந்தரேசன், முத்தமிழ் செல்வன், திருநீற்று செல்வன், சுடலை குட்டி, சிதம்பரம், மணி, 2-வது வார்டு உறுப்பினர் சிவராமன், தகவல் நுட்ப அணி சரவணன், சக்திவேல், மாவட்ட மாணவரணி நயினார் உள்ளிட்ட கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.