ஏ.கே.பி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா

சேரன்மாதேவி ஏ.கே.பி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா
முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் பங்கேற்பு
சேரன்மாதேவி, ஜன.26 –
சேரன்மாதேவி ஏ.கே.பி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
விழாவில் பள்ளி சேர்மன் முகமது அப்துல் காசிம் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி கல்வி இயக்குனர் செய்யது கலந்தர் குடியரசு தின சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு தேசிய உணர்வையும் சமூக பொறுப்பையும் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் தேசபக்தி பாடல்கள், நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை நிர்வாகி ஜி.பி.அய்யர், பள்ளி முதல்வர் மீனா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழா நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.