திருவெறும்பூர்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 668 காளைகளும்,334 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வீரர்கள் மாடு பிடிக்கும் விரத்தை கண்டு பரவசமடைந்து பாராட்டினார்.
சூரியூரை சேர்ந்த மூர்த்தி 12 மாடுகளை பிடித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கிய முதல் பரிசான காரை பெற்றார்.
புதுக்கோட்டையை சேர்ந்த யோகேந்திரன் 11மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்றார்.
புதுக்கோட்டை நல்லதங்கால்பட்டியை சேர்ந்த கார்த்தி 7 மாடுகளை பிடித்து மூன்றாம் பரிசை பெற்றார்.
போட்டியில் 63 பேர் காயமடைந்தார். இதில் 9பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியின் இறுதியாக அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு கிராம கமிட்டியினர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.






