கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வாகையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வயது 28 தந்தை பெயர் ராவணன்,வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய நண்பர்களான மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் உள்ள பன்னீர் என்பவரது தரை கிணற்றில் குளிப்பதற்காக கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் தண்ணீருள் மூழ்கிவிட்டதாக இருவரும் மேலே வந்து இராமநத்தம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ததகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறந்த நிலையில் இருந்த சக்திவேர் உடலை கைப்பற்றினர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.






