“தமிழன் உதயம்” உங்கள் பயணத் துணையாக தொடரும்.

தமிழன் உதயம் – ஆசிரியர் குறிப்பு

அன்பார்ந்த வாசகர்களே,
உலகோர் வரவேற்கும் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டையும்,
தமிழரின் மரபுச் சிறப்பை எடுத்துரைக்கும் தமிழர் திருநாளையும்,
“தமிழன் உதயம்” இதழின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
காலங்கள் மாறினாலும், மனித நேயத்தின் தேவையும் உலக அமைதியின் அவசியமும் இன்றைய காலத்தில் மேலும் தீவிரமாக உணரப்படுகின்றன.
மதம், இனம், மொழி என்ற பெயர்களால் மனிதனைப் பிரிக்கும் சூழல் உலகில் நீடிக்கிறது.
இந்தப் பிளவுகளுக்கு முடிவு கட்டி, மனிதனை மனிதனாகப் பார்க்கும் சிந்தனை வளர வேண்டும் என்பதே எங்கள் இதழின் நீண்ட நாள் கனவு.போரில்லா உலகம்,சமத்துவம் தழைத்த மனித சமூகம்,அமைதி நிறைந்த நாள்கள் —இவை கனவுகளாக அல்ல; செயல்களாக மாற வேண்டும்.
அந்த நம்பிக்கையுடன்,2026 ஆம் ஆண்டு மாற்றங்களை விதைக்கும் ஆண்டாகவும்,
மனித நேயத்தை மீட்டெடுக்கும் ஆண்டாகவும்,உலக அமைதிக்கு துணைபுரியும் ஆண்டாகவும் மலர வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
இந்த புதிய ஆண்டிலும்,உண்மை செய்திகள், சமூக விழிப்புணர்வு,இளைஞர் வழிகாட்டல்,   மகளிர் சிந்தனை,விவசாயம் மற்றும் வாழ்வியல் சார்ந்த கருத்துகள் ஆகியவற்றுடன்
“தமிழன் உதயம்” உங்கள் பயணத் துணையாக தொடரும்.
இனிய புத்தாண்டு – 2026 & தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
உங்கள்
தமிழன் உதயம்
ஆசிரியர் : சௌ. திருவள்ளுவன்.