இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த கார் அதிவேகமாக மோதி விபத்து!

இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த கார் அதிவேகமாக மோதி விபத்து!

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 (கணவர் பெயர் சுரேஷ் ), மற்றும் மகேஸ்வரி வயது 37 (கணவர் பெயர் பாலகிருஷ்ணன்) இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த (டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட) ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள் காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.