தாமிரபரணிநதியில் உயிர்பலி தடுப்புவிழிப்புணர்வு போர்டுகள் தயாரிப்புப்பணி.
பாபநாசம் மற்றும் காரையாறு சொரிமுத்தைய்யனார் கோயிலுக்கு வரும் வெளியூர்
பக்தர்கள், பயணிகள், தாமிரபரணி ஆற்றில் ஆழம் தெரியாமல், கவனக்குறைவாக குளிப்ப
தால் உயிர்பலி ஆகிவருகின்றனர். உயிர்பலி ஆவதை தடுக்கும் பொருட்டு, நதியில் ஆழம் எங்கு
உள்ளது? ஆழமற்ற பகுதி எது?சுழல் இழுப்பு எங்கு உள்ளது?குளிப்பதற்கு ஏற்ற பகுதி எது?
இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை, தகரப் போர்டுகளில் எழுதி, ஆங்காங்கே
நதிக்கரை ஓரங்களில் கடந்த கடந்த ஆண்டுகளில் நட்டு வைத்துள்ளோம். சமீபத்தின்
அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக, கரை ஓரங்களிலுள்ள பல போர்டுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.அதோடு பழுதடைந்தும் உள்ளன.
எனவே புதிய போர்டுகளை நிறுவது குறித்து, போர்டுகள் தயாரிப்பு பணி இன்று 24.12.25 ல்
மேற்கொள்ளப்பட்டது. முழுவதும் முடிந்தபின்னர் அவைகளில் வண்ணம் பூசி உரிய விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, முன்புபோல நதிக்கரை ஓரங்களில் கான்கிரீட்போட்டு ஊர்க்காடு ஆற்றங்கரை வரை நட்டுவைக்க திட்டமிட்டு உள்ளோம்.
இன்றையப் பணியில் என்னுடன் அருண். லட்சுமி, சீதா ஈடுபட்டனர்.
கிரிக்கெட் மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
சுற்றுச்சூழல் ஆர்வலர்
விக்கிரமசிங்கபுரம்






