மக்களிடம் வசூல் வேட்டை செய்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பங்கு தந்தையை நீக்க கோரி கிறிஸ்துவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை பங்குத் தந்தை அருட்பணி சந்தன சகாயம் அவர்கள் ஆலய பணி மற்றும் மக்கள் பணியில் கடந்த 4 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரை அந்த பதவியில் இருந்து நீக்க கோரியும் பல முறை மதுரை உயர்மறை பேராயர் அந்தோணிசாமி அவர்களிடம் புகார் தெரிவித்தும் இந்நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து,
மதுரை புதூர் பகுதியில் உள்ள மதுரை உயர்மறை பேராயர் இல்லத்தின் வளாகத்தில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை பகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் 10 ஊர் நிர்வாகிகள், இறை மக்கள், கிறித்துவ மக்கள் களம் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,






