தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே திருவையாறு எம்எல்ஏ கார் மோதியதில் விவசாயி ஒருவர் பலியானார். காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்,50,. விவசாயி. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், விவசாய வேலை காரணமாக, வயலுக்கு பைக்கில் சென்ற போது, ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி, தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரனின் கார், கோவிந்தராஜ் சென்ற பைக் மீது மோதியது.
இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார், கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், எம்.எல்.ஏ., சந்திரசேகரன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்து நடந்த போது எம்எல்ஏவும் காரில் இருந்ததாக தெரிகிறது.






