அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி

அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் எம் எம் பி மலை பார்ட்னர்ஸ் அப்பா ரமேஷ் பிரண்ட்ஸ் மற்றும் கேபிஎன் வஸ்தா செவுடி நண்பர்கள் சார்பாக 2நாள் கபடி போட்டி நடைபெற்றது. இப்பொடியை அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் காவல் ஆய்வாளர் அருண் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைத்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை சிவகங்கை ராம்நாடு தேனி திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். சிறப்பாக விளையாடிய கபடி வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20000 இரண்டாம் பரிசாக 15,000 மூன்றாம் பரிசாக 12,000 சிறப்பு பரிசாக 30000 உட்பட ஒ*** பரிசுகளும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முயற்சி ஏற்பாடுகளை வழக்கறிஞர் அன்பரசு சீனி அசோக் விஜய் அருண் குணா உட்பட விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்