ஸ்ரீ பொன்னர் சங்கர் மாயவர் ஸ்ரீ பெரிய அக்காண்டாஸ்வரி அருக்காணி தங்காள் திருக்கோவில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் வண்டியூர் கலுங்கடியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னர்சங்கர்மாயவர் ஸ்ரீ பெரியஅக்காண்டீஸ்வரி ஸ்ரீ அருக்காணிதங்காள் திருக்கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா 14ந் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் தனலட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கும்பாபிஷேக சர்வ சாதகம் எஸ் சுந்தர குருக்கள் ஈசான சிவம் சோமசுந்தரம் தேசிகர் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி பொன்னர் சங்கர் திருக்கோவில் பங்காளிகள் பென்னடி மக்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் முன்னிலையில் புனித நீரானது கோபுர கலசத்திற்க்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ பொன்னர்சங்கர்மாயவர் ஸ்ரீ பெரியஅக்காண்டீஸ்வரி ஸ்ரீ அருக்காணிதங்காள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகா முனிஸ்வரன் கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாரதனைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிஎம் துரைப்பாண்டியன்,செல்வி கார்மேகம் ஸ்தபதி ராமச்சந்திரன் ஆச்சாரியார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொன்னர் சங்கர் திருக்கோவில் பங்காளிகள் பென்னடி மக்கள் மற்றும் உறவினர்கள் உட்பட விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






