மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கை நீதிமன்ற ஆணைப்படி தமிழில் நடத்த கோரி தெய்வத்தமிழ் பேரவை அமைப்பினர் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பேட்டி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கை நீதிமன்ற ஆணைப்படி தமிழில் நடத்த கோரி தெய்வத்தமிழ் பேரவை அமைப்பினர் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பேட்டி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு 14 ஆண்டுகள் கழித்து 2026 இல் குடமுழுக்கு நடைபெற உள்ளது இந்த குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழா தமிழ் வேள்வி செய்பவர்கள் வைத்து நடத்த வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தமிழகம் தமிழரும் சரி பாதி கலந்துகொண்டு தமிழில் வேல்வி நடத்தப்பட வேண்டும். தமிழ் வேள்வியாளர் களை தேர்வு செய்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

ஆணும் பெண்ணும் அர்ச்சகர் ஆகலாம் என்ற விதி உள்ளது ஆனாலும் உள்ளே விட மறுக்கிறார்கள். கருவறை வெளிப்பிரகாரத்தில் தான் தமிழர்கள் பூஜை செய்யக்கூடிய நிலை உள்ளது. அரசு பணி நியமனம் பெற்றவர்களுக்கு இந்த நிலை தொடர்கிறது.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் அதுதான் எங்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாவுக்கும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். அனைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்திடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.