நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு, பழுதடைந்த சில்க் சொசைட்டி மற்றும் காதி கதர் கட்டிடங்களை புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – பாரதிய ஜனதா கட்சி

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்

கெலமங்கலத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு, பழுதடைந்த சில்க் சொசைட்டி மற்றும் காதி கதர் கட்டிடங்களை புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மாநிலத் தலைவர் அண்ணாதுரை அரசுக்கு வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெமங்கலத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை, அந்தப் பகுதியில் உள்ள நெசவாளர்கள் இடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர், பாழடைந்தும் சிதலமடைந்தும் புதர் மண்டி கிடக்கும் நெசவாளர்களுக்கு சொந்தமான கெலமங்கலம் சில்க் சொசைட்டி பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல அதன் அருகில் காதி கதர் வாரியத்திற்கு சொந்தமான இடமும் சிதலமடைந்து இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் பொழுது, மாநிலச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட தலைவர் ராமப்பா, மாநில பொதுக்குழு உறுப்பினர். பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் பிஜேபி ஒன்றிய தலைவர்ராஜேஷ் குமார், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், மாரப்பா சந்தோஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர்,

கெலமங்கலம் சில்க் சொசைட்டி என்ற அமைப்பு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் செயல்படுத்துவது நிறுத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பணியாற்றி வந்தனர். இங்கு செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த கட்டிடம் தொடர்ந்து பராமரிக்கின்றி கேட்பாரற்று முதற் மண்டி கிடக்கிறது. இது தற்பொழுது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

மேலும் இந்த சொசைட்டி நஷ்டத்தில் இயங்கிய காரணத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், சொசைட்டி இயங்கி வந்த இடம் வேறு ஒரு தனிநபர் ஆக்கிரமிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே சுமார் 150 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு இருந்த நிலையில் தற்போது எப்படி வேறு ஒருவருக்கு செல்ல இருப்பது என்பது தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே மாநில அரசு இதில் தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த இடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்… என அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போதைய காலகட்டத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக நலிவடைந்து இருக்கும் காலகட்டத்தில், அவர்களது முதலீட்டில் உள்ள இடம் விற்பனைக்கு செல்ல உள்ளது என்று சொன்னால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை எழுப்ப வேண்டி உள்ளது.

ஆகவே, இந்த இடத்தை மீண்டும் புதுப்பித்து, இங்கு கைத்தறியோ அல்லது விசைத்தறியோ அல்லது ஜவுளி பூங்காவோ மாநில அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இதே போல அருகாமையில் சுமார் 50 சென்ட் பரப்பளவிலான இடம், காதி கதர் வாரியத்திற்கு சொந்தமான இடமாகும். மத்திய அரசு தற்போது காதி கதர் மேம்பாட்டிற்கு என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அந்த இடம் சில தனிநபர்களால் காதி வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே இடித்து தள்ளி இருப்பது இந்த இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே இந்த இடத்தை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு காதி விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால் காதி பொருட்கள் விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மாநில நெசவாளர் பிரிவு சார்பாக தெரிவிப்பதாக.. அவர் கூறினார்.

சுமார் ஓர் ஆண்டுக்கு முன்பு காதி வாரியத்திற்கு சொந்தமான பாதி இடம் இடிக்கப்படும் பொழுது இந்த பகுதியில் உள்ள நெசவாளர்கள் அதை தடுத்து நிறுத்தியதோடு, அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு புகாருக்கான முதல் தகவல் அறிக்கை உள்ளது.

இதன் காரணமாக, அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை தனிநபர் ஒருவர் இடிக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு இந்த பகுதியில் உள்ளது என்பது கேள்விக்குறியாகிறது.

இனியாவது அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் விதமாக நடவடிக்கை எடுக்க முதற்கட்டமாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்….. என அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி : அண்ணாதுரை, மாநிலத் தலைவர், நெசவாளர் பிரிவு, பாரதிய ஜனதா கட்சி.