கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது சுங்கத்துறை தீவிர விசாரணை

கோயம்­புத்­தூர், க., 27: கோயம்­புத்­தூர் விமானநிலை­யத்­தில்  ஷார்­ஜா­வில் இருந்து கடத்தி வரப்­பட்டரூ.1 கோடி மதிப்­பி­லான தங்­கத்தை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­துக்கைப்­பற்­றி­னர்.கோவை விமான நிலை­யத்­தில் இருந்து ஷார்­ஜாவுக்கு வாரத்­தில் ஐந்துநாட்கள் விமான சேவை வழங­கப்ப­டு­கி­றது. காலை 3.45 மணி­ய­ள­வில் கோவை வரும் ஷார்ஜா விமா­னம் மீண்­டும் அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் ஷார்­ஜா­வுக்கு புறப்­பட்­டுச்செல்­லும். அதன்­படி நேற்று(ஆக.26) காலை ஷார்­ஜாவில் இருந்து வந்த விமானத்­தில் ரூ.1 கோடி ரூபாய் மதிப்­பி­லான கடத்­தல் தங்கக் கட்­டி­களை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். பய­ணி­கள்யாரும் அதற்கு உரிமைகோரா­த­தால் இது­கு­றித்து தீவிர தொடர் விசா­ரணை நடைபெற்று வரு­கி­றது.