தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா இவர் ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
பிறகு, தமிழில் கில்லி, மங்காத்தா, சாமி,போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர். இவருடைய அழகு மற்றும் நடிப்பு திறமை மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
இவரது நடிப்பில், விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் வரவிருக்கிறது. ஒருபக்கம் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், இவர் நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.







