குருத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் -சீறிப்பாய்ந்த காளைகள்

குருத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் -சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட குருத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கூத்தப் பெருமாள் கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு,சிறிய மாடு என்று இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மதுரை தேனி தூத்துககுடி சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டன. அப்பன்திருப்பதி முதல் பொய்கை கரைபட்டி வரை மாட்டுவண்டிகள் ஆக்ரோஷத்துடன் சீறி பாய்ந்தன.

வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.