சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது காலையில் பல்கலைக்கழக பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தினார் ஏழு அம்ச கோரிக்கையை நிறைவேற்றினால் எங்களது போராட்டம் கைவிடப்படும் என்றும் கூறினார்கள் இதன் எதிரொலியாக பதிவாளர் அவர்கள் சென்னையில் உள்ள அரசு அதிகாரியிடம் பேசிவிட்டு நாளை பதில் கூறுவதாக கூறியுள்ளார் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன்
அவர்கள் கூறுகையில் எங்களுக்கு ஏழாவது ஊதிய கமிஷன் இதுவரை வழங்கப்படவில்லை அதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை மற்றும் அயர் பணி சென்ற ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே நிரந்தரம் செய்ய வேண்டும் 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை அவர்களுக்கு தரவேண்டிய பண பயன்கள் 50 சதவீதம் கூட தரப்படவில்லை பிஹெச்டி படிக்கும் மாணவர்களுக்கு மானியத் தொகை வழங்கப்படவில்லை ஆசிரியர்களுக்கு நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை இது போன்ற பல கோரிக்கைகள் வைத்து அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி காலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்று முதல் தேர்வுகளை ஆசிரியர்கள் புறக்கணிப்பார்கள் ஆசிரியர்களை இல்லாததால் அறிவிக்கப்படாத விடுமுறை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது மாணவர்களுடைய வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது காரணம் ஆசிரியர்கள் புறக்கணிப்புதான் இதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர்,
சண்முகம்.






