எரியோடு அருகே கல்குவாரியில் தேங்கி உள்ள நீரில் மூழ்கி மில் தொழிலாளி பலி!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மில் தொழிலாளி மோகன்(40) இவர் அப்பகுதியில் கல்குவாரியில் தேங்கியுள்ள மழை நீரில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்த மோகனின் உடலை மீட்டனர்.

எரியோடு போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்